எல்லா குட்டீஸ்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! எங்கும் ஏகப்பட்ட இயற்கைப் பேரழிவுகள்... பூமிஅதிர்ச்சிகள், வெள்ளங்கள்... இன்னும் யுத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரவேல் - பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா - உக்ரேன் போன்ற நாடுகளில் சில ஆண்டுகளாக யுத்த மேகங்கள் கலைந்தபாடில்லை. 15 ஆம் நூற்றாண்டில், 13 வயதினிலே தெய்வ தரிசனங்கள் பெற்று, தேவசத்தம் கேட்டு, பின் 16 வயதிலே யுத்தத்திற்குச் சென்று, தேவனின் பெலத்தில் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையைத்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.
பிரெஞ்சில் 'ஜீன் டி ஆர்க்" என்று அழைக்கப்பட்ட இவர், பிரான்ஸ்க்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த நூறாண்டுப் போரின் காலத்தில், பிரான்சின் டாம்ரேமி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1412 ஆம் ஆண்டு பிறந்தார். உங்களைப் போன்று படிக்கவோ அல்லது எழுதவோ அவருக்குத் தெரியாது. ஆனால், அவர் மிகுந்த நம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்.
டீன்ஏஜ் பருவம் தொட்டதிலிருந்து ஜோன் தேவனை அதிகமாகத் தேட ஆரம்பித்தார். சில வேளைகளில் தெளிவான குரலில் தேவ சத்தத்தை அவர் கேட்டபோது, அதை மக்களிடம் கூறினார். பிரான்ஸ் தேசத்தை விடுவிக்க வேண்டும் என்றும், இளவரசர் சார்லஸ் VII - ஐ அரசராக்க உதவவேண்டும் என்றும் ஜோன் மக்களுக்குச் சொன்ன போது, மக்கள் அவரை சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுகிறது என்று வேடிக்கைப் பார்த்தனர். ஓர் இளம்பிள்ளை என்பதால் ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை; அவரை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் பலரிடம் பேசி எப்படியோ இளவரசர் சார்லஸை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு எட்டியது. அவரது ஆன்மீக பெலத்திலும், பேச்சிலும் ஆழ்ந்த நம்பிக்கையிலும் ராஜாவே மிகவும் வியப்படைந்தார்.
1429 ஆம் ஆண்டு முற்றிக்கையிடப்பட்ட ஆர்லியன்ஸ் நகருக்கு அனுப்பப்பட்ட பிரெஞ்ச் நிவாரணப்படையை வழிநடத்த ஜோனுக்கு படைக்கவசம் அளிக்கப்பட்டது. பிரெஞ்ச் ராணுவத்துடன் போருக்கு சென்று மன்னருக்கு உதவி செய்து பிரான்ஸ் நாட்டை திரும்பப் பெறவேண்டும்; இதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் கட்டளை! கட்டளை பிறந்ததும் வீரமுடன் எழும்பினார் ஜோன்; தன் தலை முடியைக் கத்தரித்துக்கொண்டு, போர் உடை அணிந்து, வேதத்தில் வரும் தெபோராள் போல போர்க்களம் கிளம்பிவிட்டாள்! அவரின் வருகை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எங்கும் யுத்தசத்தம்... கார்மேகங்கள் போன்று தெரிகிறது. மக்கள் நிம்மதியின்றி பயத்துடனும் கலக்கத்துடனும் இங்கும் அங்குமாக அலைமோதுகின்றனர்.
இவர் கிறிஸ்;தவ பெண் என்பதால் திருச்சபை போதகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் சிறு பெண்ணை உற்சாகப்படுத்தாமல் மாறாக அவளை பரிகாசமும் கேலிக் கிண்டலும் செய்தனர். இப்பெண் என்னதான் செய்வாள் என்று ஏளனமும் செய்தனர். ஆனால் தாவீதைப்போல கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வந்த சிறிய படையோ வீரமுடன் போரிட்டது. ஜோன் பிரெஞ்ச் வீரர்களுக்கு அதிகமாக நம்பிக்கையூட்டினதால் ஒன்பது நாட்களுக்குள்ளே ஆங்கிலேயர்களிடமிருந்து ஆர்லியன்ஸ் நகரைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடினர். இது போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஓன்றல்ல, இரண்டல்ல... தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைக் குவித்துவிட்டார் ஜோன்! ஜோனின் தலைமையில் நடந்த இந்த 'ஆர்லியன்ஸ் நகரின் விடுதலை" பிரான்ஸ்க்கான மிகமுக்கிய வெற்றியாக வரலாற்றில் அமைந்தது. இந்த வெற்றிகள் தான் சார்லஸ் VII - ஐ ரீம்ஸ் நகரில் அரசராக முடிசூட உதவின. இந்திய வரலாற்றில் ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் போன்று பிரிட்டீஷ் ராணுவத்திற்கு எதிராக வீரப்பெண்மணியாய் வெற்றிச்சிறந்தார் ஜோன்!!
என்ன சுட்டிப்பிள்ளைகளே உங்களைப்போன்றே ஜோனும் படுசுட்டிதான்!!! யுத்தத்தை முன்னின்று நடத்துவது சாதாரண காரியமா?
இந்நாட்களில் யுத்தங்களினால் எத்தனை மரணங்கள்... அழிவுகள்... இழப்புகள்... தாய் தந்தையை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகள், உணவுக்காக ஓலமிட்டும் ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் சாவோர்... அப்பப்பா... ஒவ்வொரு நாளும் நியூஸ் பேப்பரிலும்.. டிவியிலும் பார்க்கும்போது எத்தனையாய் வேதனை...?
ஆனால் பின்னால் என்ன நடந்தது...? மதவாதிகளுக்கோ ஜோனை பிடிக்கவில்லை. அவர்கள் ஜோனை சந்தேகித்தனர், ஏனென்றால், அவர்களுக்கு இப்படிப்பட்ட தேவதரிசனங்கள், திட்டங்கள் கிடைக்கவில்லை... இல்லையா... பிள்ளைகளே..? தாங்கிக்கொள்ள முடியாத அக்கூட்டம் அவளை 'பொய்புரட்டுக்காரி" என்று தீர்ப்பிட்டு திருச்சபைக்கு புறம்பாக்கியது. ஆனால், அவரோ தனக்கெதிராக சொல்லப்பட்ட அத்தனை அவதூறுகளையும் ஆணித்தரமாக மறுத்ததோடு தகுந்த விளக்கங்களையும் தந்தார். இது அவர்களை மேலும் மேலும் நடுங்கச்செய்தது.
1430 ல் ஜோன், பிரிட்டீஷ் - பிரெஞ்ச் கூட்டாளிகளான உளவு பார்த்த எதிரிகளால் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பிரிட்டீஷ் ஆதரவுடைய நீதிமன்றத்தில் அநியாயமாக விசாரிக்கப்பட்டது. 'சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்.." என்று அன்று கூவின கூட்டம் போல் இங்கேயும் 'மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும்" என்று ஏவிவிட்டனர். ஜோனை விடுவிக்கவோ அவருக்காக பரிந்து பேசி வாதிடவோ யாருமே இல்லையா? ஜோனுக்கு கொடுக்கப்பட்ட வேலையும் நோக்கமும் (purpose) நிறைவேறிவிட்டனவா?
ஆம்; எதற்காக ஜோன் தேவனால் பிடிக்கப்பட்டாரோ அதை செய்து முடித்துவிட்டார். தன்னை பூரணமாக தேவனின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார்.
1431-ல் மே 31 அன்று இளம்பெண் ஜோன் தனது 19 வயதிலேயே ரூவான் நகரில் மரத்தில் கட்டப்பட்டவராய்; தீயில் உயிருடன் எரித்துக் கொளுத்தப்பட்டார். கொடுங்கோலர்கள் வேடிக்கைப் பார்க்க, அத்தீயின் நடுவே அவர் உதடுகள் 'இயேசுவே... இயேசுவே..." என்று முணுமுணுக்க உடல் எரிந்தது... உயிர் பிரிந்தது... விண் நோக்கிப் பறந்தது...!
இயேசு கிறிஸ்து விண்ணைவிட்டு மரிப்பதற்காகவே மண்ணில்வந்து அத்தனை பாடுகளையும் வேதனைகளையும் நமக்காக சகித்து மரித்து உயிர்த்தார் என்றால் அவருக்காக நாம் எந்த தியாகத்தையுமே பெரிதாக செய்துவிட முடியாது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மறுவிசாரணையில் ஜோன் 'நிரபராதி" குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டதோடு அவர் தியாகி என்று தெரிந்து நிரூபிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது! அதோடு கத்தோலிக்க திருச்சபையால் அவருக்கு 'புனிதர்" பட்டமும் கொடுக்கப்பட்டது!! ஜோன் ஆப் ஆர்க் இன்றும் பிரெஞ்சு தேசத்தின் ஒற்றுமை, வீரம் மற்றும் நம்பிக்கையின் நீடித்த சின்னமாக விளங்குகிறார்.
அன்பான செல்லங்களே! எப்படி இப்பெண் உலக வரலாற்றில் மட்டுமின்றி தேவனுடைய பெரிய history - யில் வந்திட்டாங்க பார்த்தீங்களா? நீங்களும் அதே ஹிஸ்டரியில் ஒரு முக்கியமான part அப்படித்தானே...? உங்க வாழ்க்கையிலும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு தானே... அது